இளம் மனதில் காயம்
A Tamil poem about a wound in the heart.
Published
Reading time1 min read

இளம் மனதில் காயம்
எல்லாம் இவள் செய்த மாயம்
நொடியினில் அவள்புறம் சாயும்
நிழலும் நான்தானே
நிலவாய் நானும்
நினைவில் தேயும்
பிறையாய் ஆனேனே
இரவுகள் நீளும்
ஏக்கமும் அதனோடு சேரும்
இம்சையும் நீதானே
விளங்கினை கோர்க்கும்
விழிகளால் நோக்கும்
வாணியாய் வந்தாலே…