உன் வழி பார்த்திருப்பேன்
A Tamil poem about love and longing.
Published
Reading time1 min read

எம் மொழிதல் வன்மையாயினும், மென்மையாயினும்
உம் புரிதல் வசந்தமாயினும், வலியை கொடுப்பினும்
யாம் அறியேன் பெண்ணே…
உன் மௌனத்தால் உரைந்தேனடி,
உன் விலகலால் விழுந்தேனடி..
நாம் கொண்ட நேசம்,
என்னை காக்க சொல்லுதடி…
அதுவே உன்னை சேர்க்க சொல்லுமடி…
காத்திருப்பேன், உன் வழி பார்த்திருப்பேன்..