செஞ்சுரியனே!!
A Tamil poem about a child.
Published
Reading time1 min read

சிலநொடி உறக்கம் செல்லும்
பகையில்லா கோபம் கொள்ளும்
கள்ளமில்லா குறுநகையால் வெல்லும்
மொழியில்லா வார்த்தைகள் சொல்லும்
நளினமில்லா நாட்டியதால் உலவும்
கருணைசிறு விரலால் வருடும்
அளவிலா அன்பில் படரும்
பார்வையால் இதயம் நெருடும்
செம்பொன்னிட்டதேக இனியனே
செய்வழி மடிசேர்ந்த முன்னவனே
கார்விழியனே இளஞ்செழியனே
என்றும் குன்றாதிரு செஞ்சுரியனே..