கலங்கிய பிம்பம்
A Tamil poem about scattered reflections.
Published
Reading time1 min read

கலங்கிய பிம்பமாய் கடலிலே வான்நிலா
கரைதொடா ஓடமாய் என்மனம் வரும்உலா
ஆழ்கடலின் அமைதியிலும் ஆர்பரிக்கின்றது நெஞ்சம்
அகவையின் அன்பினை அடையவே கெஞ்சும்
இதயத்தீவில் கேட்கின்றேன் தஞ்சம்
இல்லையென்றதில் கண்ணீரே மிஞ்சும்