என் முதல் நாயகனே
A Tamil poem dedicated to a father.

என் முதல் நாயகனே என்னை மாற்றும் மாயவனே ஏனோ எனக்கு வாழ்வு தந்தாய் எங்கோ இன்றென்னை விட்டுசென்றாய்
வெறும் தலைப்பாய் தந்தாய் என் பிறப்பில் உன் வாழ்வை மறந்தாய் என் வளர்வில் களைப்பாய் நானும் உன்னைக் கண்டால் மறைப்பாய், அதைத் தொலைத்தே நீயும் சிரிப்பாயே
நான் வீழ்ந்தாலும் எழுந்திடவே போதித்தாய் நன்மை தீமை யாவும் நீ உரைத்தாய் நற்குணம் யாவும் நீ விதைத்தாய் நீகொண்ட யாவும் எனக்கு அளித்தாய்
என் தடம் மாறாதிருக்க எதிர்த்தாய் உன்பாசம் தனை மறைப்பாய் ஆசான் வேடம் தரிப்பாய், ஆயினும் அன்பில் உனக்கும் நிகரில்லை ஆயிரம் தாய்
உன்னைப் பார்த்தே நான் வளர்ந்தேன் வயதின் விழும்பில் தானே ஏனோ மறந்தேன் உயரில் நானும் பரந்தேன், என் சிறகே நீயென உணர்ந்தேன், விழும்போதே
எனக்கென கடமைகள் யாவும் நீ முடித்தாய், உணகின்று சேவைக் கடன் தீர்க்கும் முன் ஏன் மறித்தாய் விழுதாய் நானும் தாங்கிடும் முன் விழுந்தாய் சரிந்தாயே, என்னைத் துயரில் விட்டு
அருகில் இருந்தாலும்,அயல் சென்றாலும் உன்விதையே நானும், என்செயலில் நிற்பாய் என்னாலும் கர்மம் தீர்ந்தபின் உன்னடி சேர்வேன் பொன்னாளில்
— கணேசன் கருப்பையா