கண்ணம்மா நின்முகங் கண்டேன்

A Tamil poem about seeing the beloved's face everywhere.

Published
Reading time1 min read
கண்ணம்மா நின்முகங் கண்டேன்

காலை கண்விழிக்கவே, தேடல் தொடங்குதடி
காணா நோதலில் நேரம் கலியுதடி
கணாக்கள் தூண்டிட ஆவல் நெறிக்குதடி,
கண்ணம்மா, நின்நினைவாலே நாநெழுந்தேன்.

கதிரவன் கனலில் கதிர்காயும் பொழுதிலே
கசனை தொலைந்தடி இதயத்தினிலே
கருணாகடாட்சம் வேண்டியே நீ வரும்வேளையிலே
கண்ணம்மா,பாதை நோக்கியிருந்தேன்.

கடிகை மறந்து மனம் கதனம் நடத்த
காற்றில் மென்மாருதம் மலர்வாடை கடத்த
கடுவன் இதயவறை பனிப்போர்வை படர்த்த
கண்ணம்மா,உன்வரவை யாமுனர்ந்தேன்.

கீழ்க்கை எட்டி, அங்கை அசைத்திட்வே
கன்னி நீகுறுநகைக்க நிகழ்வேளை மறந்திடவே
கீர்த்தி பெருஞ்சுடர்கொண்ட சிற்றுயிராகவே
கண்ணம்மா, உணர்நிலையற்று லயத்திருந்தேன்.

கடந்தே சென்றாலும், பகல்யாவும் வெறுமை சூலவே
கீரற்று உறைவுக்கல்லாகி பொழுதைகழிக்கவே
கீத பட்டியல்யாவும் நின்பற்று மீள இயங்கவே
கண்ணம்மா, உன்நினைவைதான் சுமர்ந்திருந்தேன்.

கறுந்திரை வான்சுல, பணிநிறையற்றிருக்கவே
கடலில் பாய்மரமாய் வழி தொலைத்திருக்கவே
கலக்கந்தீர, கலங்கரை விளக்காகவே
கண்ணம்மா, நின்முகங் கண்டேன்

கேண்மைவேண்டி ஐயுறவோடு கோரிச்சேர்க்க
கேளிசெய்தாலும் ஐயனை அரிவையேற்க
கேள்வன் பேறுகாலகடந்த தாயாய்நிற்க
கண்ணம்மா, பேதையன்பைதான் ஈன்றேன்.

கங்குபொழுதினிலே பின்புறத்திலே
கணிகைவந்து நின்றெனது கண்மறைக்கவே
கனநொடியினிலே முத்தபோர்தொடுக்கவே
கண்ணம்மா, பேரன்பை கயல்விழியில் யாமறிந்தேன்.

கத்துருவோ,திரைகடலோ, பார்க்குமெதிலும்
காலமோ, பண்டமோ , கேட்கும் ஓலியாவிலும்
கடமையோ மெய்நிலை தத்துவம்மறந்தே யாவிலும்
கண்ணம்மா, நின்முகம் மட்டுமே கண்டேன்.