இளஞ்செழியா!!
A Tamil poem dedicated to my son on his birth.
Published
Reading time1 min read

எந்தையே இழிந்தோரிடம் நோதலினும் இறப்பேமேலென ஊழ்வினை தத்துகொண்டாயோ
என் ஒன்றிமை நீக்கஎம் இல்லாள்சூலி சேர்ந்து இளஞ்செழியனாய் என்கரம் சேர்ந்தாயோ !
என்சிவம் வரோதயனால் வரேந்திரனாய் வந்தவனே இன்முக பகிடிநகைப்பினில் உடைந்த போவேனோ
எழில்கவியாவரும் தோற்பார், மழலை இவன் சிணுங்கிட சிந்திய சொற்களில்
எல்லாம் வல்ல இறைவா இவன் செல்லும் வழியெல்லாம் துணைவா !!!