இப்பிறவி தவமே
A Tamil poem my pregnant wife

இப்பிறவி தவமே இறைவன் தந்த வரமே இல்லறம் சேர்வது இன்னொரு முகமே இதயமெல்லாம் இன்ப நிறமே
வன்சொல்லால் வலிகொண்ட மனமே விலகியது பழிச்சொல் இக்கணமே வருவது நம்போர் சொல்லும் இனமே வருந்தாதே வெல்லலாம் இனிமே
நம்மைத் தூற்றியோரை தூரம் விடு நன்மை வார்பொற்க்கு விலாசம் கொடு நம்மை சூழ்ந்தோர்க்கெல்லாம் நளபாகம் இடு நிரைபின், மனதால் பெரியோரிடம் ஆசிநாடு
செந்தமிழ் வம்சமாய்,செல்வத்தின் அம்சமாய் செய்யுள் பிழையற்று செப்பென செதுக்கிடுவோம், சேய்தன் வாழ்வினை சிற்பமாய், சீர் மணவாளனாய்,
பைந்தமிழ் சொல்லுரைத்து தொடர்வோம் பொதுமறை பால் அனைத்தும் அருள்வோம், ஐம்புலனும் ஆற்றல்பெற ஆயர்கலையும் உரைப்போம் ஓம்காரம் செய் உணர காத்திருப்போம்
கார்முகில் கண்ணனோ, குறிஞ்சி கந்தனோ கலைமகளோ, திருமகளோ, மறைமகளோ காணத்துடித்து ஆவால் கொண்டேனோ
எனை ஆளும் சிவமே எந்நாளும் அருள்வாய் ஜெயமே எல்லாம் இனி சுகமே ..